சிட்னி முதல் நியூயார்க் மற்றும் லண்டனுக்கான இடைநிறுத்தமில்லாத பயணச் சேவையை வழங்க ஆஸ்திரேலிய விமான நிறுவனம் குவாண்டாஸ் திட்டமிடுகிறது. இருப்பினும், பயணிகளால் அந்தப் பயணத்தைச் சமாளிக்க முடியுமா என்பதற்கு அது முதலில் விடை காணவேண்டும்.
19 மணி நேரம் நீடிக்கக்கூடிய, இடைநிறுத்தமில்லாத பயணச் சேவையை வழங்கப்போவதாக அந்நிறுவனம் கடந்த வியாழக்கிழமை அறிவித்தது. போயிங் 787-9 ரக விமானங்கள் இதற்காகப் பயண்படுத்தப்படும். அந்த விமானங்களில் அதிகபட்சமாக 40 பேர் பயணம் செய்யலாம்.

