தமிழ் நேசன்: ஊழியர்களின் அவலநிலை

தமிழ் நேசன்: ஊழியர்களின் அவலநிலை

1 mins read
1f92c941-2f37-462d-98e3-3e27df94fd74
'டாமான்சாரா ஹைட்ஸி'ல் உள்ள டத்தோஶ்ரீ எஸ். வேள்பாரியின் அலுவலக கட்டடத்தின் முன், 30 முதல் 40 ஆண்டுகள் பணியாற்றிய முன்னாள் பத்திரிக்கை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: திலீடர்ஸ்-ஓன்லாயின் -

கோலாலம்பூர்: மலேசியாவின் ஆக பழமையான தமிழ் மொழி பத்திரிக்கை நிறுவனமான தமிழ் நேசன், 96 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி மூடப்பட்டது. மூடப்பட்ட நிறுவனத்தின் ஊழியர்களின் சம்பள விவகாரங்கள் இன்னும் தீர்க்கப்பட்டதாக இல்லை. ஊதிய நிலுவைத் தொகை மற்றும் இழப்பீடு தொடர்பாக எட்டு மாதங்கள் காத்திருந்து, 40 முன்னாள் தமிழ் நேசன் செய்தித்தாள் தொழிலாளர்கள் இந்த பிரச்சினையை தீர்க்க மனிதவளத் துறை அமைச்சர் எம்.குலசேகரனின் தலையீட்டைக் கோரி உள்ளனர். அப்பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் கே. பத்மநாபன், இந்த பிரச்சினை உடனடி கவனத்தை பெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். '' இவ்வாண்டு ஜனவரி 28ஆம் தேதி கிடைத்த கடிதம்படி, எங்களுக்கு கிடைக்க வேண்டிய நிலுவைகள் தரப்பட வேண்டும். அமைச்சரின் உதவியுடன் இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண்போம் என்ற நம்பிக்கை உள்ளது,'' என்றார் அவர். 'டாமான்சாரா ஹைட்ஸி'ல் உள்ள டத்தோஶ்ரீ எஸ். வேள்பாரியின் அலுவலக கட்டடத்தின் முன், 30 முதல் 40 ஆண்டுகள் பணியாற்றிய முன்னாள் பத்திரிக்கை ஊழியர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பத்மநாபன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அனைத்து ஊழியர்களின் இழப்பீட்டுக்கு, கிட்டத்தட்ட 1.4 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள தொகை கொடுக்கப்பட வேண்டும்.