படகு தீ விபத்து: 300 பேர் பத்திரமாக மீட்பு, மூவர் பலி

இந்தோனீசியாவின் ஜாவா தீவுக்கு அருகில் தீப்பற்றி எரிந்த படகில் இருந்த 300 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மேலும் மூவர் சடலமாக மீட்கப்பட்டதாக இந்தோனீசிய மீட்புக் குழுவினர் கூறியுள்ளனர். சுரபாயாவிற்கும் போர்னோ தீவின் பலிக்பாப்பான் நகருக்கும்  இடையில் படகு சென்று கொண்டிருந்தபோது இத்தீச்சம்பவம் ஏற்பட்டுள்ளது. ஆனால், படகில் பயணம் செய்தவர்களின் விவரப்படி 111 பேர் மட்டுமே பயணம் செய்ததாகக் கூறியதால், மீட்புக் குழுவினர் மிகுந்தச் சிரமத்திற்கு ஆளாகினர். தீ விபத்திற்கான காரணம் குறித்த விவரம் எதுவும் கூறப்படவில்லை. படம்: ஏஎஃப்பி