வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

1 mins read

சோல்: அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாக இருப்போம் என வடகொரியா கூறிய நிலையில், நேற்று இரண்டு சிறிய வகை ஏவுகணைகளைப் பரிசோதனை செய்து

உள்ளது.

இதுபற்றி தென்கொரிய ராணுவம் வெளியிட்டுள்ள செய்தியில், "வடகொரியா தெற்கு ஹம்கியோங்கில் உள்ள சொந்தோக் என்ற நகரில் இருந்து நேற்று காலை 6.45 மற்றும் 7.02 மணியளவில் ஜப்பானின் கிழக்கு கடல் பகுதியில் குறுகிய தூர இலக்கை அழிக்கும் இரண்டு ஏவுகணைகளை அனுப்பி பரிசோதனை செய்துள்ளது.

"அவை இரண்டும் மேக் 6.5 என்ற உயர் வேகத்தில் 380 கி.மீட்டர் தொலைவுக்கு 97 கி.மீட்டர் உயரத்தில் பறந்து சென்றது.

"எங்களுடைய ராணுவம், கூடுதலாக ஏவுகணைகள் ஏவப்படுகின்றனவா என்று நிலைமையை கண்காணித்து வருகிறது," என்று தெரிவித்து உள்ளது. கடந்த ஜூலை 25ஆம் தேதியில் இருந்து வடகொரியா மேற்கொள்ளும் 7வது ஏவுகணைச் சோதனை இது.