ரோஹிங்கியா அகதிகள் பேரணி

ரோஹிங்கியா அகதிகள் பேரணி

1 mins read
6e534dd6-f8df-4ae4-aa0f-03a184bf1ec0
மியன்மார் படைகளின் வன்முறைத் தாக்குதலில் இருந்து தப்பி ஓடிய இரண்டு ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், சுமார் 200,000 ரோஹிங்கியாக்கள் ஞாயிற்றுக்கிழமை பங்களாதேஷ் அகதிகள் முகாமில் பேரணி நடத்தினர். படம்: ராய்ட்டர்ஸ் -

டாக்கா: மியன்மார் படைகளின் வன்முறைத் தாக்குதலில் இருந்து தப்பி ஓடிய இரண்டு ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், சுமார் 200,000 ரோஹிங்கியாக்கள் ஞாயிற்றுக்கிழமை பங்களாதேஷ் அகதிகள் முகாமில் பேரணி நடத்தினர். அகதிகளை மியன்மாருக்குத் திருப்பி அனுப்பும் பேச்சு இரண்டாவது முறையாக தோல்வியுற்ற சில நாட்களுக்குப் பிறகு இந்தப் பேரணி நடத்தப்பட்டுள்ளது. கடந்த 2017ல் சுமார் 740,000 பேர் மியன்மாரின் ரக்கைன் மாநிலத்தில் இருந்து தப்பியோடினார்.

அவர்களில் பலர் அண்டை நாடான பங்ளாதேஷ் எல்லையில் உள்ள காக்ஸ் பசார் பகுதியில் உள்ள அகதிகள் முகாம்களில் வசித்து வருகின்றனர். மியன்மார் படைகளின் வன்முறையை கண்டிக்கும் விதமாக சுமார் இரண்டு லட்சம் பேர் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஒன்று கூடினர். "ரோஹிங்கியாக்களின் கவலைகளை இந்த உலகம் கேட்பதில்லை" என்று அவர்கள் பாடிக்கொண்டே சென்றனர். இதற்கிடையே, நேற்று முன்தினம் அகதிகள் முகாமில் ஆடவர் இருவர் கொல்லப்பட்டதாக பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் சொன்னார். ஆளும் கட்சி பிரமுகர் ஒருவர் கொல்லப்பட்டது தொடர்பில் அந்த இருவரை போலிசார் கொன்றதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து அவர்கள் இருவரும் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தனர்.