இந்தோனீசியாவின் புதிய தலைநகரம் இன்று அறிவிப்பு

இந்தோனீசியாவின் புதிய தலைநகரம் இன்று அறிவிப்பு

1 mins read
b706edde-9efa-43f5-bdcc-351056c5a090
இந்தோனீசியாவின் அதிபர் திரு ஜோக்கோ விடோடோ தலைநகரத்தை மாற்றுவது குறித்து சட்டமன்ற உறுப்பினர்களின் சம்மதம் பெற்றுள்ளார். ராய்ட்டர்ஸ் -

இந்தோனீசியாவின் புதிய தலைநகரத்தை அதன் அதிபர் திரு ஜோக்கோ விடோடோ இன்று அறிவிக்கவுள்ளார்.

நிர்வாகத் தலைமையகமாக எந்த நகரம் தேர்ந்தெடுக்கப்படும் என்று இந்தோனீசிய அதிபர் செயலகத்தின் அதிகாரபூர்வ 'யூடியூப்' பக்கத்தில் நேரடி ஒளிபரப்பின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

இது சிங்கப்பூர் நேரப்படி பிற்பகல் இரண்டு மணிக்கு அறிவிக்கப்படும்.

சுமார் 30 மில்லியன் பேர் வசிக்கும் ஜகார்த்தாவில் அதிகமான சுற்றுப்புறத் தூய்மைக்கேடு இருப்பதுடன், ஒவ்வோர் ஆண்டும் வாகனப் பயன்பாடு பல்லாயிரக்கணக்கில் உயர்ந்து சாலைகளில் தொடர்ந்து நெரிசல்களை ஏற்படுத்தியுள்ளன.

புதிய தலைநகரத்தை அமைப்பதற்குச் சுமார் 466 டிரில்லியன் ரூப்பியா ($45 பில்லியன்) செலவிடப்படும் என்றும் கட்டுமானப் பணியை 2021ஆம் ஆண்டில் தொடங்குவதற்குத் திட்டம் உள்ளதென்றும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

2024ஆம் ஆண்டிலிருந்து சில அலுவலகங்கள் இடமாற்றம் செய்யப்படும்.