அமேசான் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் உதவியை ஏற்க மறுத்த பிரேசில்

அமேசான் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் உதவியை ஏற்க மறுத்த பிரேசில்

1 mins read
0b84e39a-dd1c-4c47-9536-fd48d038abb9
அமேசான் காட்டுத் தீயில் பாதிக்கப்பட்ட ஒரு பகுதி. படம்: ஏஃப்பி -

பூமியின் நுரையீரல் என அழைக்கப்படும் அமேசான் காட்டில் கடந்த சில வாரங்களாக எரிந்துகொண்டு வரும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த ஜி7 நாடுகள் வழங்கிய உதவியை நேற்று (ஆகஸ்ட் 26) பிரேசில் ஏற்க மறுத்தது .

ஆண்டின் தொடக்கத்திலிருந்து கிட்டத்தட்ட 80,000 காட்டுத் தீ விபத்துகள் பிரேசில் நாட்டில் ஏற்பட்டுள்ளன.

US$20 மில்லியன் (S$27.8 மில்லியன்) மதிப்புள்ள உதவியை ஜி7 நாடுகள் பிரேசிலுக்கு வழங்க முனைந்தன.

அமேசான் காட்டுத் தீ தலையாய முன்னுரிமையோடு கலந்துரையாடப்படவேண்டும் என்று ஜி7 மாநாட்டை ஏற்பாடு செய்த பிரெஞ்சு அதிபர் மெக்ரோன் வலியுறுத்தினார்.

இந்த உதவி ஜரோப்பிய நாடுகளின் காடுகளைச் சீர்செய்வதற்குப் பயன்படலாம் என பிரேசில் அதிபர் ஜேய்ர் போல்சனோரோ ஜி1 செய்தி ஊடகத்திடம் தெரிவித்தார்.