கேரி லாம்: வன்முறை மிகக் கடுமையாகி வருகிறது

கேரி லாம்: வன்முறை மிகக் கடுமையாகி வருகிறது

1 mins read
c17df64c-ee3e-4762-8617-d399db149d03
நேற்று செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஹாங்காங்கின் நிர்வாகி கேரி லாம், வன்முறை எந்தப் பிரச்சினைக்கும் தீர்வாகாது. எனவே, வன்முறையை வழக்கமானதாகவோ அல்லது பெருமைக்குரியதாகவோ ஆக்கக்கூடாது படம்: ஏஎப்பி -

அரசுக்கு எதிரான போராட்டங்களில் வன்முறை அதிகரித்திருப்பது மிகவும் கடுமையானது என்று ஹாங்காங்கின் நிர்வாகி கேரி லாம் கூறியுள்ளார். அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடங்கிய பிறகு நேற்று முதன்முறையாக பொது இடத்தில் பேசிய அவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை போலிசார் தண்ணீரைப் பீய்ச்சியடித்தது, கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியது போன்றவற்றில் ஈடுபட்டபோது ஆர்ப்பாட்டக்காரர்கள் செங்கற்களையும் பெட்ரோல் குண்டுகளையும் வீசியதைச் சுட்டிக்காட்டினார்.

"ஆர்ப்பாட்டக்காரர்கள் சாதாரண பொருட்களை எறியவில்லை. கடுமையான காயம் விளைவிக்கக்கூடிய பெட்ரோல் குண்டுகள் போன்றவற்றை எறிகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடைகள் சேதமடைந்துள்ளன.

"வன்முறை எந்தப் பிரச்சினைக்கும் தீர்வாகாது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். வன்முறையை வழக்கமானதாகவோ அல்லது பெருமைக்குரியதாகவோ ஆக்கக்கூடாது," என்றார் அவர்.

இந்தப் பிரச்சினையைக் கையாள போலிஸ் புகார் ஆணையமே போதுமானது என்றும் ஆர்ப்பாட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான தற்சார்புக் குழு தேவையில்லை என்றும் அவர் சொன்னார்.

இதற்கிடையே, ஜி-7 மாநாட்டில் கலந்துகொண்ட தலைவர்கள், ஹாங்காங்கின் தன்னாட்சி உரிமைக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டதற்கு கடுமையான அதிருப்தியைத் தெரிவித்துக் கொள்வதாக நேற்று சீனா அறிக்கை வெளியிட்டது.