யங்கூன்: ஃபேஸ்புக் வழியாக மியன்மார் ராணுவத்தை விமர்சித்த அந்நாட்டின் முன்னணி திரைப்பட இயக்குநர் ஒருவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மியன்மார் அரசியலிலும் அரசியலமைப்புச் சட்டத்திலும் ராணுவத்தின் தலையீடு இருப்பதாக திரு மின் ஹிதின் கோ கோ கியி என்ற அந்த இயக்குநர் குறைகூறியிருந்தார். இதை
அடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்தத் தீர்ப்பு எதிர்பார்த்ததுதான் எனக் குறிப்பிட்ட அவர், தம்மைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும் தான் திரும்பி வருவேன் என்றும் சொன்னார். அத்துடன், அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற தம்முடைய தலைவர்களுடன் இணைந்து ஒவ்வொருவரும் கடுமையாகப் போராட வேண்டும் என்று மியன்மார் மக்களுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

