ஆப்கானிஸ்தானில் தலிபான் போராளிகள் தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் தலிபான் போராளிகள் தாக்குதல்

1 mins read
ef4ae1d3-b5b9-430f-b439-a78018505d29
-

காபூல்: ஆப்கானிஸ்தானின் குண்டுஸ் நகரில் நான்கு பக்கங்களிலிருந்தும் தலிபான் போராளிகள் நேற்று தாக்குதல் நடத்தினர். போராளிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருவதை பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சுகாதார இலாகா தலைமை யகத்தை போராளிகள் கைப்பற்றியதாக குண்டுஸ் நகர சுகாதார அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அரசாங்கத்திற்கும் தலிபான் குழுவினருக்கும் இடையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறும் வேளையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.