அமேசான் காடுகளில் மேலும் புதிய தீச்சம்பவங்கள்

அமேசான் காடுகளில் மேலும் புதிய தீச்சம்பவங்கள்

1 mins read
b7ed9b11-99dd-4c7e-b744-7920daf3e7ed
-

சாவ் பாலோ: அமேசான் காடுகளில் தீச்சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

காடுகளை எரிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும் முதல் 48 மணி நேரத்தில், 3,859 புதிய தீச்சம்பவங்களை தேசிய வான்வெளி ஆய்வு நிலையத்தின் செயற்கைக்கோள் தகவல்கள் கண்டறிந்துள்ளன. அவற்றில் சுமார் 2,000 தீச்சம்பவங்கள் அமேசான் காடுகளில் உருவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, காட்டுத் தீயின் வெப்பத்தில் உடல் பாகங்கள் கருகி, பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு வன உயிர் ஆர்வலர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.