ஜகார்த்தா: தீ வைத்தவர்கள் கைது

ஜகார்த்தா: தீ வைத்தவர்கள் கைது

1 mins read
917f87f3-f36e-4ce8-8dda-049267904da3
-

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் பாப்புவா மாநிலத்தில் மாணவர் ஒருவர் கொடிக் கம்பத்தை வளைத்ததாகக் கூறி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கு ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் அரங்கேறின. அப்போது அரசாங்கக் கட்டடங்களுக்குத் தீ வைக்கப்பட்டது.

இதையடுத்து, கட்டடங்களுக்குத் தீ வைத்தது தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் விசாரணையை எதிர்நோக்கி உள்ளதாகவும் பாப்புவா போலிஸ் பேச்சாளர் ஒருவர் சொன்னார்.