சூடான்: சூடானில் கடந்த 23 ஆண்டுகளாக ஆட்சி செய்துவந்த ஓமர் அல் பஷீர், கடந்த ஏப்ரல் மாதம் பதவியை இழந்த பிறகு, ரகசிய இடத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், ஓமர் அல் பஷீர் தனது வீட்டில் 69 லட்சம் யூரோக்கள், 3 லட்சத்து 51 ஆயிரத்து 770 அமெரிக்க டாலர்கள், 57 லட்சம் சூடான் பவுண்டுகளை முறைகேடாக பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

