ஓய்வு வயதை அதிகரிக்க மலேசிய அரசு பரிசீலனை

ஓய்வு வயதை அதிகரிக்க மலேசிய அரசு பரிசீலனை

1 mins read

ஈப்போ: மலேசிய அரசாங்கம், ஓய்வு வயதை 60லிருந்து 65க்கு உயர்த்துவதை குறித்து பரிசீலித்து வருகிறது.இது தொடர்பாக இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பு நிதி அமைச்சுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று மனிதவள அமைச்சர் எம். குலசேகரன் தெரிவித்தார். சிங்கப்பூர் உட்பட பல வளர்ந்த நாடுகளில் ஓய்வு வயது உயர்த்தப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார். ஈப்போவில் தாமான் டாக்டர் சீனிவாசகம் என்ற இடத்தில் நேற்று நடைபெற்ற மரம் நடு விழாவில் பங்கேற்ற அமைச்சர் குலசேகரன் செய்தியாளர்களிடம் பேசினார்.