சஹிர் நாயக் விவகாரம்; காத்திருக்கும் போலிசார்

சஹிர் நாயக் விவகாரம்; காத்திருக்கும் போலிசார்

1 mins read

பெட்டாலிங் ஜெயா: சர்ச்சைக்குரிய பேச்சாளர் சஹிர் நாயக் விவகாரத்தில் தலைமைச் சட்ட அதிகாரியின் உத்தரவுக்குக் காத்திருக்கிறோம் என்று மலேசிய குற்றவியல் விசாரணைப் பிரிவின் இயக்குநர் ஹஸ்லி முஹமட் தெரிவித்துள்ளார். இந்தியாவைச் சேர்ந்த சஹிர் நாயக் தற்போது மலேசியாவில் தங்கியுள்ளார். இவரைத் தேடப்படும் நபராக இந்திய அரசு அறிவித்துள்ளது.

அண்மையில் பேசிய சஹிர் நாயக், மலேசியாவில் உள்ள இந்தியர்கள் மகாதீரை ஆதரிப்பதில்லை என்று கூறி புதிய சர்ச்சையைக் கிளப்பினார்.

இவரது பேச்சு மற்றவர்களைப் புண்படுத்தி அமைதியை சீர்குலைக்கும் எண்ணம் கொண்டது என்பதால் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.