'திருமதி ரோஸ்மா வர்த்தகர் ஜோ லோவை அடிக்கடி தொடர்புகொள்வார்'

'திருமதி ரோஸ்மா வர்த்தகர் ஜோ லோவை அடிக்கடி தொடர்புகொள்வார்'

1 mins read
f21ac094-12f6-4a56-9a34-a61a6302ed5c
திரு நஜிப்பின் மனைவி ரோஸ்மா. படம்: சைனா பிரஸ் -
multi-img1 of 2

மலேசியாவால் தேடப்பட்டு வரும் வர்த்தகர் ஜோ லோவை மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சூர் அடிக்கடி தொடர்புகொள்வார் என்று திரு நஜிப்பின் முன்னாள் சிறப்பு அதிகாரி அம்ஹாரி எஃபெண்டி நஸாருதீன் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

ஆனால் அவர்களுக்கிடையேயான உரையாடல்களைப் பற்றித் தெரியாது என்றும் அம்ஹாரி தெரிவித்துள்ளார். அம்ஹாரி சுமார் 10 ஆண்டுகள் வரை திரு நஜிப்புடன் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமதி ரோஸ்மாவின் மகன் ரிஸா ஷஹ்ரிஸ் அப்துல் அஸிஸ் உடன் ஜோ லோவுக்கு நட்பு ஏற்பட்ட பிறகு திரு நஜிப்பும் அவரது மனைவியும் லோவுடன் நெருக்கமாகப் பழகி வந்ததாக அம்ஹாரி கூறியுள்ளார்.

ஜோ லோ 'வியத்தகு ஆற்றல் மிகுந்தவராக' இருந்ததால் அந்த நட்புக்கு திருமதி மன்சூர் மறுப்பு தெரிவிக்கவில்லை என்றும் அம்ஹாரி கூறியுள்ளார்.

'1எம்டிபி' தொடர்பாக மலேசிய உயர் நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் திரு அம்ஹாரி இந்தத் தகவல்களைத் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்