கோலாலம்பூர்: முஸ்லிம் அல்லாதவர்களால் தயாரிக்கப்பட்டு ஹலால் முத்திரையிடப்பட்ட பொருட்களுக்கு எதிரான சமூக ஊடக இயக்கத்தை மலேசியாவின் அடுத்த பிரதமராகவிருக்கும் அன்வார் இப்ராகிம் கண்டித்துள்ளனர். முஸ்லிம் அல்லாதோர் தயாரிக்கும் பொருட்களுக்கு எதிராக செயல்படுவது என்பது ஆரோக்கியமற்ற செயல் என்று அவர் கூறியுள்ளார்.
முஸ்லிம்களால் தயாரிக்கப்படும் பொருட்களை ஆதரித்தும், அப்பொருட்களை முன்னிலைப்
படுத்தும் வகையிலும் அண்மையில் சிலர் குரல் கொடுத்தனர். அத்துடன் அவர்கள் முஸ்லிம் அல்லாதோர் தயாரிக்கும் பொருட்களில் ஹலால் முத்திரையைப் பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
"ஹலால் பொருட்களை நீங்கள் விளம்பரப்படுத்திக்கொள்ள விரும்புகிறீர்கள் என்றால் அது ஏற்றுக்கொள்ளக்கூடியதே. அதே சமயம், சர்ச்சைக்குரிய வகையில் மற்ற இனத்தவரை இழிவுபடுத்தும் வகையில் உங்கள் தயாரிப்புகளை விளம்பரம் செய்தால் அது கண்டிக்கத்தக்கது என்று திரு அன்வார் இப்ராகிம் நேற்று கூறினார்.
ஹலால் பொருட்களை முஸ்லிம்கள் ஆதரிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதே. அதே வேளையில் சீன உற்பத்தியாளர்களால் தயாரிக்கப்படும் ஹலால் பொருட்களை முஸ்லிம்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றனர் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
கெடிலான் ரக்யாட் கட்சியின் தலைவருமான திரு அன்வர் இப்ராகிம், "பல இன, பல சமயங்களைச் சேர்ந்த மக்களைக் கொண்டுள்ள நமது சமூகத்தில் இதுபோன்ற எதிர்ப்புக்குரல் ஆரோக்கியமற்றது," என்று கூறினார்.
முஸ்லிம் அல்லாதவர்களின் பொருட்களைப் புறக்கணிப்பதில் உடன்பாடு இல்லை என கடந்த வெள்ளிக்கிழமை மலேசிய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது கூறினார்.
இந்-தப் புறக்-க-ணிப்-பைக் கண்-டிக்-கு-மாறு அம்னோ, பாஸ் கட்-சி-களை மலே-சிய நிதி அமைச்-சார் லிம் குவான் எங் கேட்-டுக்-கொண்-டார்.

