மலேசிய ராணுவத்தின் மின்னல் படை வீரர் மாண்டது குறித்து விசாரிக்க சிறப்புக் குழு

மலேசிய ராணுவத்தின் மின்னல் படை வீரர் மாண்டது குறித்து விசாரிக்க சிறப்புக் குழு

1 mins read

கோத்த கினபாலு: மலேசிய ராணுவத்தின் மின்னல் படை வீரரும் மலேசியாவின் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் ஏ.ஆர்.படுல் என்பவரின் மகனுமான மேஜர் முகமது சாகிர் ஆர்மயா என்பவர், துப்பாக்கிக் குண்டுகளை சோதித்துப் பார்க்கும்போது தவறுதலாக குண்டடி பட்டு மாண்டார்.

லொக் காவி ராணுவ முகாமில் நேற்று காலை 9.20 மணிக்கு இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. பதின்மூன்று ராணுவப் பிரிவுகளின் மூத்த அதிகாரிகள் பங்கேற்கும் ராணுவக் கண்காட்சி நடைபெற்றது. அப்போது துப்பாக்கிகளைச் சோதித்துப் பார்த்தபோது வீரர் முகமது சாகிர் சுடப்பட்டு மாண்டார்.

மாண்ட வீரர் மேஜர் சாகிரின் குடும்பத்திற்கு அந்நாட்டு தற்காப்பு அமைச்சர் முகமது சபு தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொண்டார்.

நேற்று நடந்த ராணுவக் கண்காட்சிக்குப் பிறகு மேஜர் சாகிர், தனது தாயாரைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்தார் என்று அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

வீரர் சாகித் மலாக்காவில் உள்ள சுங்கை ஊடாங் என்னும் ராணுவ முகாமில் பணியாற்றி வந்தார்.

ராணுவக் கண்காட்சியில் நேற்று நடந்த இந்தத் துயரச் சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்புக் குழு ஒன்றை அமைத்துள்ளதாக மலேசிய ராணுவம் தெரிவித்துள்ளது.