கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிடம் சிறப்பு அதிகாரியாகப் பணிபுரிந்த அம்ஹாரி எஃபெண்டி நசருதீன் நீதிமன்றத்தில் தனது சாட்சி அறிக்கையை வாசிக்கும்போது கண் கலங்கினார். அவருடைய முன்னாள் முதலாளி அஸ்லின் அலியஸ் மறைவு பற்றி பேசும்போது கண்கலங்கினார்.
திரு அஸ்லின் மறைவுக்குப் பின்னர், திரு நஜிப் ரகசியமான விவரங்களை அம்ஹாரியிடம் நேரடியாகப் பரிமாறிக்கொண்டார். ரகசியமாக முடிக்கவேண்டிய முக்கியப் பணிகளும் அம்ஹாரியிடம் ஒப்படைக்கப்பட்டன.
அம்ஹாரியை சீனாவுக்குச் சென்று அங்கு லோ டெக் ஜோவுடனான வர்த்தகம் மற்றும் உறவை வலுப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை உறுதிப்படுத்துமாறு கூறினார். அந்த நேரத்தில் அவரது உத்தரவை நான் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். அதே வேளையில் அந்தச் சூழ்நிலை எனக்கு மன அழுத்தத்தைக் கொடுத்தது.
பதவியில் இருந்து விலகிவிடலாம் என்று தாம் எண்ணியதாகவும் அம்ஹாரி கூறினார். ஆனால் திரு நஜிப், தனக்கு முதலாளி என்பதோடு அவர் இந்நாட்டின் பிரதமரும்கூட. எனவே அவர் பேச்சை மீறி என்னால் எதுவும் செய்யமுடியவில்லை. 1எம்டிபியில் ஏற்பட்ட நஷ்டங்களை ஈடுகட்ட என்னையும் சேர்த்துக்கொள்ளக்கூடும் என்று தாம் அஞ்சியதாக உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
1எம்டிபி நிதியில் 2.3 பில்லியன் ரிங்கிட் லஞ்சமாகப் பெற்றதாக நான்கு குற்றச்சாட்டுகளும் கள்ளத்தனமாகப் பணத்தை மாற்றியதாக 21 குற்றச்சாட்டுகளும் திரு நஜிப் மீது சுமத்தப்பட்டுள்ளன.

