சோல்: வடகொரியாவுக்கு சீனா அளித்து வரும் ஆதரவை மறுஉறுதிப்படுத்தியுள்ளது. அவ்வகையில் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் நேற்று பியோங்யாங் வருகை தந்திருந்தார். அந்த வருகையின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக இருந்துவரும் நெருங்கிய தொடர்பைக் கட்டிக்காக்க உறுதிபூண்டுள்ளன.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து சீனத் தலைவர் ஸி ஜின்பிங்கும் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் ஐந்து முறை சந்தித்துள்ளனர். சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி பியாங்யாங்குக்கு மூன்று நாள் அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார். வடகொரிய வெளியுறவு அமைச்சர் ரி யோங் ஹோவை சந்தித்துப் பேசிய சீன அமைச்சர் வாங், இந்த இரு நாடுகளுக்கும் இடையேயுள்ள நெருங்கிய தொடர்பையும் ஒருங்கிணைப்பையும் வலுப்படுத்த சீனா தயாராகவுள்ளது என்று உறுதியளித்துள்ளார்.

