ஜோகனஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவில் வெளிநாட்டினருக்கு எதிராக நடத்தப்படும் வன்முறையை அந்நாட்டின் அதிபர் ராமபோசா வன்மையாகக் கண்டித்துள்ளார்.
வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்துவதைத் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த எந்தவொரு குடிமகனும் நியாயப்படுத்தமுடியாது என்று அதிபர் ராமபோசா நேற்று தெரிவித்தார். வெளிநாட்டினர் தாக்கப்பட்டதில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து சென்ற திங்கட்கிழமை ஜோகனஸ்பர்க் நகரில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். இந்த வன்முறையைத் தொடர்ந்து மற்ற ஆப்பிரிக்க நாடுகளும் அதன் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. வெளிநாட்டினருக்குச் சொந்தமான நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அதுபோன்ற வன்செயல்களை தென்னாப்பிரிக்காவில் அனுமதிக்க முடியாது என்றும் அதிபர் ராமபோசா காணொளி ஒன்றில் உரையாற்றி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

