வெடிகுண்டு தாக்குதலை நடத்திய தம்பதியர் அடையாளம்

வெடிகுண்டு தாக்குதலை நடத்திய தம்பதியர் அடையாளம்

1 mins read
01859596-3197-467a-b023-7a52771b886b
-

ஜகார்த்தா: பிலிப்பீன்சில் கடந்த ஜனவரி மாதம் தேவாலயம் ஒன்றில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 21 பேர் மாண்டனர். அந்தத் தாக்குதலை இந்தோனீசியப் போராளி ஒருவரும் அவரது மனைவியும் நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், தாக்குதல் நடத்திய அந்தத் தம்பதியரை மரபணு சோதனை மூலம் இந்தோனீசிய போலிசார் அடையாளம் கண்டுள்ளனர். ருல்லி ரியான் ஸெக்கேவும் அவரது மனைவியான உல்ஃபா ஹண்டாயாணி சாலியும் வெடிகுண்டு தாக்குதலை நடத்தியதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் இணைய இந்தத் தம்பதியர் சிரியாவுக்குச் செல்ல முயன்றதாகவும் அதிகாரிகளிடம் சிக்கியதை அடுத்து சீர்திருத்தப் பயிற்சிக்குச் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த ஜனவரி மாதம் ஜோலோவில் உள்ள தேவாலயத்தில் இரண்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் பிரார்த்தனைக்காகக் கூடியவர்கள் மாண்டனர்.