நேப்பாளத்தில் டெங்கி பரவல்

நேப்பாளத்தில் டெங்கி பரவல்

1 mins read

காத்மாண்டு: நேப்பாளத்தில் டெங்கிக் காய்ச்சலால் ஒருவர் மரணமடைந்ததாலும் அந்நாட்டின் வேளாண் துறை அமைச்சர் சக்ரபாணி கணால் அக்காய்ச்சலால் அவதிப்பட்டு வருவதாலும் அதிகாரிகள் அதிக விழிப்புடன் இருந்து, கண்காணித்து வருகின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, அங்கு 2,559 பேர் டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. டெங்கிக் காய்ச்சலால் இதுவரை அங்கு நால்வர் உயிரிழந்துவிட்ட நிலையில், அடுத்த மாதம் வரை டெங்கி பரவல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.