தமிழ்க் குடும்பத்தை நாடு கடத்த விதிக்கப்பட்ட தடை மேலும் நீட்டிப்பு

தமிழ்க் குடும்பத்தை நாடு கடத்த விதிக்கப்பட்ட தடை மேலும் நீட்டிப்பு

1 mins read

மெல்பர்ன்: கணவன், மனைவி, பிள்ளைகள் இருவர் என நால்வர் அடங்கிய தமிழ்க் குடும்பத்தை இலங்கைக்கு நாடு கடத்த விதிக்கப்பட்டிருந்த தடை மேலும் 12 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரியா-நடேசலிங்கம் என்ற அந்தத் தம்பதியினர் 2012, 2013ஆம் ஆண்டுகளில் இலங்கையில் இருந்து தனித்தனியாக ஆஸ்திரேலியா சென்றதாகக் கூறப்படுகிறது. அவர்களுக்கு அங்கேயே கோபிகா, தருணிகா என இரு பெண் குழந்தைகள் பிறந்தன. இந்நிலையில், கடந்த வாரம் அந்நால்வரும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட இருந்த நிலையில், கடைசி நேரத்தில் நீதிமன்றம் தலையிட்டு அதை நிறுத்தி வைத்தது. இந்த வழக்கின் முழுமையான, இறுதியான விசாரணை இம்மாதம் 18ஆம் தேதி நடைபெறும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.