கோலாலம்பூர்: மலேசியர்களுக்கு மிகவும் பிடித்தமான சுற்றுலாத் தளமாக ஜோகூர் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
மலேசிய சுற்றுலா, சுற்றுலா முகவர் சங்கக் கண்காட்சியில் பெருமளவு பாரம்பரியத்தையும் உலகத் தரம் வாய்ந்த பூங்காக்களையும் உள்ளடக்கிய ஜோகூர் சிறந்த சுற்றுலாத் தளமாக முடி சூட்டப்பட்டது.
"தென் மாநிலமான ஜோகூருக்கு உள்ளூர் மக்கள் அதிகம் வந்து செல்கின்றனர்.
"அண்டை நாடான சிங்கப்பூர் உட்பட சீனா, இந்தியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகமாக ஜோகூருக்கு வருகையளிக்கின்றனர்," என்று எம்ஏடிடிஏ எனும் சங்கத்தின் தலைவர் டான் கோக் லியாங் கூறினார்.
கோலாலம்பூரில் உள்ள உலக வர்த்தக நிறுவனத்தில் நேற்று நடைபெற்ற சுற்றுலா கண்காட்சியில் அவர் பேசினார்.
ேஜாகூரில் இடம்பெற்றுள்ள தெசாரு கடற்கரை, 'லீகோலாண்ட் மலேசியா' ஆகிய இரண்டும் மலேசியர்களுக்குப் பிடித்தமான இடங்களாகவும் பெயர் குறிப்பிடப்பட்டு உள்ளன என்று திரு டான் சொன்னார்.

