பஹாமசில் உயிர்ச் சேதம் அதிகரிப்பு

பஹாமசில் உயிர்ச் சேதம் அதிகரிப்பு

1 mins read
7c183411-956d-4dfe-a873-b2c8982dd580
சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்கள் மார்ஷ் துறைமுகம் வழியாக வெளியேற்றப்படுகின்றனர். படம்: ராய்ட்டர்ஸ் -

மார்ஷ் துறைமுகம்: பஹாமசில் டோரியன் சூறாவளிக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 43ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

டோரியன் சூறாவளி பஹா மசை தலைகீழாக புரட்டி போட்டு உள்ளது. இந்த நிலையில் சூறா வளியால் ஏற்பட்டுள்ள சேதங் களின் மதிப்பு பில்லியன் டாலரைத் தாண்டும் என்று கூறப்படுகிறது.

ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.

கிராண்ட் பஹாமாவில் மட்டும் நான்கில் மூன்று வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.

இந்த நிலையில் இன்னும் பலர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர் என்று அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்தனர். உயிர் பிழைத்தவர்கள் ஒரே சமயத்தில் பாதுகாப்பான இடத்தை நோக்கிச் செல்வதால் பெருங் குழப்பமும் ஏற்பட்டுள்ளது.

கிரேட் அபாகோ, கிராண்ட் பஹாமா உள்ளிட்ட துறைமுகங்க ளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது என்று அதிகாரிகள் கூறினர்.