ஹாங்காங்: ஹாங்காங்கில் கடந்த 14 வாரங்களாக முடிவுக்கு வராமல் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்க ளால் வெளிநாட்டவர்கள் அங்கிருந்து வெளியேற முற்படுகின்றனர்.
குறைவான குற்றச்செயல்கள், குறைந்த வரி, வாழ்க்கை முறை ஆகியவற்றால் பெரிய பெரிய வங்கிகளையும் நிறுவனங்களையும் ஈர்த்தது ஹாங்காங்.
ஆனால், தொடர் ஆர்ப்பாட்டங்களால் நிலைகுலைந்துள்ள வேளையில், வேலைக்காகவும் தொழிலுக்காகவும் ஹாங்காங்கில் குடியேறியுள்ள வெளிநாட்டவர்கள் அங்கிருந்து வெளியேறும் பட்சத்தில் அது அந்நாட்டின் பொருளா
தாரத்தைப் பாதிக்கும்.
உலகின் நான்காவது பெரிய பங்குச் சந்தையைக் கொண்டுள்ள ஹாங்காங்கில் பல நூற்றுக்கணக் கான வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது மண்டல அலுவலகத்தைக் கொண்டுள்ளன.
ஆனால், சர்ச்சைக்குரிய நாடு கடத்தும் மசோதாவை ஹாங்காங் தலைவர் கேரி லாம் சட்டப்பூர்வமாக திரும்பப் பெற்றுவிட்டபோதும் மக்களிடையே அதிருப்தி தொடர்ந்து நீடிப்பதாக ஃபிட்ச் ரேட்டிங்ஸ் எனும் நிறுவனம் கூறுகிறது.
ஆர்ப்பாட்டங்களால் அனைத்துலக அளவில் ஹாங்காங்கின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டிருப்பது அதன் கடன் குறியீடு குறைந்து போவதற்கு ஒரு காரணம் என்றும் அது கூறியது.

