காபூல்: அரசாங்க, தனியார் ஊடகச் செய்தியாளர்கள் அறுவரை தலிபான் அமைப்பினர் கடத்தியுள்ளனர்.
ஊடகப் பயிலரங்கிற்காக கிழக்கு ஆப்கானிஸ்தானின் ஜுர்மட் மாவட்டத்தில் பக்தியா
விற்குச் சென்று கொண்டிருந்த வானொலி, தொலைக்காட்சி செய்தியாளர்கள் கடத்தப்பட்ட
தாக உள்ளூர் ஊடகமான டோலோ செய்தி வெளியிட்டது.
இதற்கிடையே, தவறுதலாக செய்தியாளர்களைக் கடத்திவிட்ட
தாகவும் அவர்களை விரைவில் விடுவிப்பதாகவும் தலிபான் அமைப்பு கூறியுள்ளது.
இந்நிலையில், தலிபான்கள் வன்முறையை நிறுத்தினால் மட்டுமே ஆப்கானிஸ்தானில் உண்மையான அமைதி ஏற்படும் என்று அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி கூறியுள்ளார்.

