'மலேசியாவில் புகைமூட்டம் நீடிக்க வாய்ப்பு'

'மலேசியாவில் புகைமூட்டம் நீடிக்க வாய்ப்பு'

1 mins read

கோலாலம்பூர்: கனமழைக்கு வாய்ப்பு குறைவாக உள்ளதாலும் அண்டை நாடான இந்தோனீசியாவில் கட்டுப்படுத்தப்படாத

தீச்சம்பவங்கள் தொடரக்கூடும் என்பதாலும் மலேசியாவில் இம்மாத இறுதி வரை புகைமூட்டம் நீடித்திருக்க வாய்ப்புள்ளதாக 'தி ஸ்டார்' ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தென்மேற்கு பருவக்காலம் இம்மாத இறுதி வரை இருப்பதால் எல்லை கடந்த புகைமூட்டம் மேலும் தொடர வாய்ப்பு

உள்ளதாக மலேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் கூறியுள்ளார்.

வரும் நாட்களில் வறட்சியான வானிலை நிலவும் என்றும் அவர் சொன்னார்.

இந்தோனீசியாவின் சுமத்ரா

விலும் கலிமந்தானிலும் தீச்சம்பவங்கள் மேலும் அதிகரிக்கும் காரணத்தால் மலேசியாவின் பெரும்பாலான பகுதிகளில், குறிப்பாக மேற்கு கடலோரம், மேற்கு சரவாக் பகுதிகளை புகைமூட்டம் சூழந்திருக்கும் என்றும் அவர் சொன்னார்.

கலிமந்தானில் மட்டும் சுமார் 1,000 கட்டுப்படுத்தப்படாத தீச்சம்பவங்கள் கண்டறியப்பட்டு உள்ளன.

சரவாக்கின் கூச்சிங், சமரஹான், ஸ்ரீ அமான் பகுதிகளில் நேற்று நண்பகல் 12 மணி நிலவரப்படி காற்று தூய்மைக்கேட்டுக் குறியீடு 201 முதல் 242 என்ற மிக மோசமான அளவில் இருந்தது.