லண்டன்: இங்கிலாந்தில் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 பேர் அண்மையில் பதவிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தொழிலாளர், ஓய்வூதியதாரர்கள் நலத்துறையின் பெண் அமைச்சர் ஆம்பர் ரட் நேற்று பதவி விலகினார்.
நாடாளுமன்ற ஆளுங்கட்சி கொறடா பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ள ஆம்பர் ரட், "21 உறுப்பினர்கள் பதவி நீக்கப்பட்ட விவகாரம் ஜனநாயகத்தின் மீதும் அடிப்படை நாகரிகத்தின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்," என தனது பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
உடன்பாடு ஏதுமின்றி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான மசோதாவிற்கு எதிராக வாக்களித்ததால் அவர்கள் நீக்கப்பட்டனர்.

