'புகார் திரும்பப் பெறப்பட்டாலும் சரணடைய வேண்டும்'

'புகார் திரும்பப் பெறப்பட்டாலும் சரணடைய வேண்டும்'

1 mins read

பெட்டாலிங் ஜெயா: பாதிக்கப்பட்டவர் போலிசில் அளித்த புகாரைத் திரும்பப் பெற்றுக்கொண்டபோதும் மெர்டேக்கா இரவின்போது அம்பாங்கில் நடந்த சண்டை தொடர்பாக பிகேஆர் கட்சியின் தலைவர் அன்வார் இப்ராஹிமின் உதவியாளர் ஃபர்ஹாஸ் வஃபா சல்வோடர் ரிசால் முபாரக் சரணடைய வேண்டும் என்று சிலாங்கூர் குற்ற விசாரணை பிரிவுத் தலைவரும் மூத்த உதவி ஆணையருமான ஃபட்ஸில் அகமட் தெரிவித்துள்ளார்.

"விசாரணைக்கு உதவும் வகையில் முக்கிய சந்தேக நபரான ஃபர்ஹாஸ் கூடிய விரைவில் சரணடைய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்," என்று அவர் கூறியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்காக ஏற்கெனவே கைது செய்யப்பட்ட ஐவரில் நால்வர் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.