அன்வார்: அடிப்படை கொள்கைகளை மலேசிய அரசு மறுஆய்வு செய்ய வேண்டும்

அன்வார்: அடிப்படை கொள்கைகளை மலேசிய அரசு மறுஆய்வு செய்ய வேண்டும்

2 mins read
8910c97c-1389-4b20-873f-d1c207ac15ae
-

கோலாலம்பூர்: பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் கொள்கைகளின் தோல்விகளை அடையாளம் கண்டு, பல அடிப்படைத் திட்டங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று பிகேஆர் கட்சியின் தலைவரான அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். அனைத்து இனங்களையும் உள்ளடக்கிய, வறுமையை ஒழிப்பதை இலக்காகக் கொண்ட புதிய திட்டங்கள் உருவாக்கப்படும் என்றும் அனைத்து மலேசியர்களின் நலனுக்கே தாம் முன்னுரிமை வழங்குவேன் என்றும் திரு அன்வார் கூறினார்.

கோலாலம்பூரிலுள்ள சிலாங்கூர் இந்தியர் வர்த்தக தொழில் சபையின் 90ஆம் ஆண்டு நிறைவுவிழாவில் சனிக்கிழமை அன்று பேசிய திரு அன்வார், இன அடிப்படையிலான புதிய பொருளியல் கொள்கையை உதாரணமாகச் சுட்டினார். அந்தக் கொள்கையால் மலாய் சமூகத்தினரிடையே கூட வறுமையைப் போக்க வழிகாண முடியவில்லை என்றார்.

இந்த புதிய பொருளியல் கொள்கையின்படி, பெரும்பான்மையினரான மலாய்க்காரர்களுக்கும் ஏனைய மண்ணின் மைந்தர்களின் வறுமை நிலையை உடனடியாகக் குறைக்கும் வகையில் பல்கலைக்கழகங்கள், அரசாங்க வேலைகள், வீடமைப்பு போன்றவற்றில் அவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

"நமது கொள்கைகள் தவறானவை என்பதும் அவற்றில் அடிப்படைக் குறைபாடுகள் உள்ளன என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளன. மோசமான வறுமை உள்ளது. சமூக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், ஒட்டுமொத்தமாக, பெரிய அளவில் மறுஆய்வு தேவைப்படுகிறது என்றார் அவர்.

"கொடிய வறுமை இன்னும் உள்ளது. இதில், தோட்டங்களிலும் கிராமப்புறங்களிலும் வசிக்கும் மலாய்க்காரர்கள், இந்தியர்கள் மிக மோசமான வறுமையில் இருக்கிறார்கள். இதை நாம் ஏற்றுக்கொண்டு அடிப்படைத் திட்டங்களை மறுஆய்வு செய்ய வேண்டும்," என்றார் அவர்.

பொருளியல் விவகார அமைச்சரான அஸ்மின் அலியும் பொருளியல் திட்டப் பிரிவும் இந்த குறைபாட்டைக் கவனிக்க வேண்டும் என்று திரு அன்வார் கூறினார்.

"கொள்கைகளின் விளைவுகளைத் தவறாகக் கணிப்பது அக்கொள்கைகளின் மிகப்பெரிய தோல்வியாகவும் அழிவாகவும் இருக்கும். இடதுகாலில் கடுமையான காயம் இருக்கும்போது, வலது காலை வெட்டுவது போன்றது," என்று அவர் சுட்டினார்.

கடந்த மாதத்தில் ஐக்கிய நாடுகள் மன்றத்தைச் சேர்ந்த பேராசிரியர் அல்ஸ்டன் வழங்கிய ஆய்வறிக்கையில், மலேசியாவில் மோசமான ஏழ்மை நிலை இருப்பதை அவர் குறிப்பிட்டிருப்பதையும் அன்வார் சுட்டிக் காட்டினார்.

மலேசியர்கள் இனவாதம், மதவாதம் தொடர்பிலான அணுகுமுறையைப் புறக்கணிக்க வேண்டும்.

சீன, இந்தியர் சங்கங்களும் இனி இன ரீதியான மேம்பாட்டுத் திட்டங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல், அனைத்து இனங்களையும் உள்ளடக்கிய திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட அன்வார், மலாய் இனத்தினரும் தங்களின் மனப்போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் திரு அன்வார் வேண்டுகோள் விடுத்தார்.

இந்-திய வர்த்-த-கர்-கள் எதிர்-நோக்-கும் பிரச்-சி-னை-களை தொழில் சபை-யின் தலை-வர் ஆர் இரா-ம-நா-தன் தமது கவ-னத்-திற்-குக் கொண்டு வந்-த-தா-க-வும் அவற்-றைக் களைய வேண்-டிய முயற்-சி-கள் எடுக்-கப்-படும் என்-றும் அன்-வார் கூறி-னார்.