திருமண வைபவத்தில் அதிர வைத்த உருவ ஒற்றுமை

திருமண வைபவத்தில் அதிர வைத்த உருவ ஒற்றுமை

1 mins read
523fa360-2ea1-4fd9-8151-27e3b2d28ff2
சிலாங்கூர் திருமண நிகழ்வு ஒன்றில் எடுக்கப்பட்ட படம். -

சிலாங்கூர்: மலேசியாவின் சிலாங்கூரில் தனது நண்பர் ஒருவரின் திருமணத் திற்குச் சென்ற அஸ்லி யோஸோப்புக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த அந்தத் திருமணத்தில் அனைவரும் ஒன்றிணைந்து குழுவாகப் புகைப்படம் எடுத்துக்கொண்டபோது, அச்சு அசல் அப்படியே தன்னைக் கண்ணாடியில் பார்ப்பதுபோன்ற ஒரு பிரமை.

நன்றாக உற்றுப் பார்த்தால் தனது முகச்சாயலில் இன்னொருவர் சற்று அருகில் நிற்பதை அறிந்து திடுக்கிட்டார் 29 வயது திரு அஸ்லி.

இன்னொரு வேடிக்கை என்னவென்றால் அஸ்லி அணிந்திருந்த உடையைப் போன்றே சிவப்பு நிற டீ-சட்டை, ஜீன்ஸ், அதே மொட்டைத் தலை, அதே தடித்த கறுப்புக் கண்ணாடியை அந்த ஆடவர் அணிந்திருந்தது அஸ்லிக்கு மேலும் அதிர்ச்சியைத் தந்தது. இருவருமே மணமகனின் நண்பர்கள் என்பது பின்னர் தெரியவந்தது. இரட்டையர் போல் காட்சி தந்த அந்த இரு இளையர்களும் ஒருவருக்கொருவர் தொடர்பில்லாதவர்கள் என்றார் அஸ்லியின் நண்பர் அமிர்.