ஹாங்காங்: அமெரிக்காவில் உலக வர்த்தக மையத்தைத் தரைமட்டமாக்கிய 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11 தாக்குதல்களை அனுசரிக்கும் விதமாக, பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுசேரும் நோக்கத்துடன் ஹாங்காங் மக்கள் நேற்று ஆர்ப்பாட்டங்களை ஒத்திவைத்தனர்.
நேற்று பெரிய அளவிலான ஆர்ப்பாட்டங்களுக்கு திட்டமிடப்பட்டிருந்ததாக சீன நாளிதழ் ஒன்று வெளியிட்டிருந்த செய்தி தவறு என்றும் அவர்கள் கூறினர்.
ஹாங்காங்கில் குற்றம் புரிவோரிடம் விசாரணை நடத்த சீனாவுக்கு நாடு கடத்தும் சர்ச்சைக்குரிய மசோதா தொடர்பில் கடந்த சில மாதங்களாக ஹாங்காங்கில் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. ஒரு சில வேளைகளில், அவை வன்முறையாகவும் வெடிக்கின்றன.
"சீன அரசாங்க ஊடகங்களுக்கு அதன் நம்பகத்தன்மை குறித்து கவலையே இல்லை. வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில் பரவும் பொய்ச் செய்திகளைக் கண்மூடித்தனமாக நம்பி அவற்றை உறுதி செய்யாமல் செய்தியாக வெளியிடுகின்றன," என்று ஆர்ப்பாட்டக்காரரான மைக்கல் என்பவர் கூறினார்.
மூன்று மாதங்களுக்கு மேல் நீடிக்கும் கலவரங்கள் தணியாத நிலையில், ஆர்ப்பாட்டங்களி
லிருந்து ஹாங்காங் ஒரு நாள் நிச்சயமாக மீளும் என்று தலைமை நிர்வாகி கேரி லாம் நேற்று முதலீட்டாளர்களுக்கு உத்தரவாதம் அளித்தார். ஆர்ப்பாட்டக்காரர்
களுடன் அரசாங்கம் கலந்துரையாடுவதன் மூலம் இந்த உள்நாட்டுப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் எனத் தாம் திடமாக நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.
முன்-னாள் பிரிட்-டிஷ் கால-னித்-து-வ-மான ஹாங்-காங், 1997ல் சீனா-வி-டம் ஒப்-ப-டைக்-கப்-பட்-டது.

