போதைப் புழங்கிக்கு 17 ஆண்டுச் சிறை

போதைப் புழங்கிக்கு 17 ஆண்டுச் சிறை

1 mins read

சிபு: மலேசிய போதைத் தடுப்பு முகவை அதிகாரியைத் தாக்கிய போதைப் புழங்கி ஒருவருக்கு 17 ஆண்டுச் சிறைத் தண்டனையும் நான்கு பிரம்படித் தண்டனையும் விதித்துள்ளது மலேசிய நீதிமன்றம். ரேமண்ட் பக்காக் கின்சிங் என்ற 18 வயது ஆடவர் பண்டார் பாரு பெர்மைஜயா என்னும் இடத்தைச் சேர்ந்தவர்.

ஜுயிங் கராய் என்ற 28 வயது அதிகாரியைத் தாக்கிய குற்றத்திற்காக அவருக்கு 10 ஆண்டுச் சிறையும் மூன்று பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

தாக்கப்பட்டவரின் பணப்பை, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றைத் திருடியதற்காக 6 ஆண்டுகள் சிறையும் ஒரு பிரம்படியும் விதிக்கப்பட்டது.