இந்தோனீசியாவில் நிலநடுக்கம்

இந்தோனீசியாவில் நிலநடுக்கம்

1 mins read

கோலாலம்பூர்: இந்தோனீசியாவின் தாலௌட் தீவுகளில் நேற்று 5.6 ரிக்டர் அளவில் இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

தாலௌட் தீவுகளில் இருந்து 43 கிலோ மீட்டர் தொலைவில் 73 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என மலேசிய ஆய்வு மையம் தெரிவித்ததாக பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்தது.