கெழுத்தி மீன் வயிற்றில் நெகிழித் துகள்

பேங்காக்: தாய்லாந்தின் ட்ராங் வட்டாரக் கடற்பகுதியில் பிடிக்கப்பட்ட கடல் கெழுத்தி மீனின் வயிற்றில் நுண்ணிய நெகிழித் துகள்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் இவ்வகை மீன்களைக் கண்டு பயப்பட வேண்டாம் என்று மக்களை அந்நாட்டின் மீன்வளத் துறை வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. கடலில் நெகிழிக் குப்பைகள் கலப்பதால் மீன்கள் அதை உணவு என்று உண்ணும் நிலை ஏற்படுகிறது. எனவே கடலில் குப்பைகளைப் போடக்கூடாது என்று சமூக ஊடகங்கள் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வேலையில் அந்த வாரியம் இறங்கியுள்ளது.