பிரிட்டிஷ் நாடாளுமன்றக் கூட்ட ரத்தைத் திரும்ப பெற கோரிக்கை

லண்டன்: பிரிட்டிஷ் நாடாளுமன்றக் கூட்டத்தை அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் ரத்து செய்தது சட்டவிரோதமானது என்று ஸ்காட்லாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றக் கூட்டத்தை ரத்து செய்ய எடுக்கப்பட்ட முடிவை திரும்ப பெற பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து எவ்வித உடன்பாடுமின்றி பிரிட்டன் வெளியேறினால் சமூக அழுத்தங்கள், பொதுமக்களிடையே சட்ட ஒழுங்கு பாதிப்பு ஆகியவை தலைதூக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Loading...
Load next