ஜப்பானின் புதிய சுற்றுப்புற அமைச்சர் ‌ஷிஞ்சிரோ: அணுசக்தி பயன்பாட்டை ஜப்பான் நிறுத்த வேண்டும்

தோக்கியோ: ஜப்பானில் உள்ள அணு உலைகள் அனைத்தையும் மூட வேண்டும் என்று அந்நாட்டின் புதிய சுற்றுப்புற அமைச்சர் ‌ஷிஞ்சிரோ கொய்ஸுமி குரல் கொடுத்துள்ளார். 2011ஆம் ஆண்டு ஃபுகு‌ஷிமாவில் நடந்த பேரிடரைப் போன்று இன்னோர் அசம்பாவிதம் நடப்பதைத் தவிர்க்க வேண்டுமெனில் இங்குள்ள அணு ஆலைகள் மூடப்பட வேண்டும் என்று சூளுரைத்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ஜுனிசிரோ கொய்ஸுமியின் மகனான அமைச்சர் ‌ஷிஞ்சிரோ கொய்ஸுமி, அணுசக்திக்கு எதிராகக் குரல் கொடுப்பவர். ஜப்பானின் ஆளுங்கட்சியான எல்டிபி எனப்படும் முற்போக்கு ஜனநாயகக் கட்சியோ புதிய பாதுகாப்பு விதிமுறைகளுடனான அணுசக்தியை ஆதரித்து வருகிறது. இந்நிலையில் அக்கட்சியைச் சேர்ந்த சுற்றுப்புற அமைச்சர் ‌ஷிஞ்சிரோ மட்டும் அதற்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளது அக்கட்சித் தலைவர்களிடையே சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

பிரதமர் ‌ஷின்ஸோ அபே, சுற்றுப்புற அமைச்சராக ‌ஷிஞ்சிரோவை நியமனம் செய்த பின்னர், நேற்று முன்தினம் நடந்த மாநாடு ஒன்றில் பேசிய அமைச்சர் ‌ஷிஞ்சிரோ, “அணு உலைகளை எவ்வாறு துடைத்தொழிப்பது என்பது குறித்து மட்டுமே நான் ஆய்வு செய்ய விரும்புகிறேன். அவற்றை எவ்வாறு தக்கவைத்துக்கொள்வது என்றல்ல,” என்று கூறியுள்ளார்.

ஜப்பானின் அணுஉலைகள் சார்ந்த விதிமுறைகள் யாவும் சுற்றுப்புற அமைச்சின் கட்டுப்பாட்டில் உள்ளன.

ஃபுகு‌ஷிமா டாய்ச்சி நிலையத்தில் மூன்று அணுஉலைகள் தோக்கியோ எலக்ட்ரிக் பவர் நிறுவனத்தால் இயக்கப்பட்டு வந்தன.

கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானைத் தாக்கிய நிலநடுக்கத்தாலும் சுனாமியாலும் அந்த உலைகள் தீப்பற்றி எரிந்து செயலிழந்தன. அதனால் அணு உலைகளில் இருந்து வெளியான கதிர்வீச்சில் பாதிக்கப்படாமல் அப்பகுதியில் வாழ்ந்த ஏறக்குறைய 160,000 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அவ்வாறு வெளியேறியவர்களில் பலர் இன்னும் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பவில்லை.

அந்த அணுஉலைகள் நாட்டின் மின்தேவையில் 30 விழுக்காட்டை சரிசெய்யக்கூடியதாக இருந்தது. எனவே புதிய பாதுகாப்பு விதிமுறைகளின்கீழ் மீண்டும் அந்த அணுஉலைகள் அரசின் அனுமதிக்காக காத்திருக்கின்றன.

இந்நிலையில் புதிதாக சுற்றுப்புற அமைச்சர் பதவியை ஏற்றுள்ள ‌ஷிஞ்சிரோ கொய்ஸுமி, அணுஉலைகளுக்கு எதிராகப் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடைய தந்தையான முன்னாள் பிரதமர் ‌ஷிஞ்சிரோ கொய்ஸுமி, ஃபுகு‌ஷிமா அணு உலைப் பேரிடருக்குப் பின்னர் தீவிர அணுசக்தி எதிர்ப்பாளராக உருவெடுத்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!