வீடு, வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை: கேரி லாம் உறுதி

ஹாங்காங்: ஆர்ப்பாட்டக்காரர்கள் புதிய போராட்டங்களுக்குத் தயாராகி வரும் வேளையில், மக்களிடம் ஆழமாக வேரூன்றியுள்ள அதிருப்தியைக் களைய வீட்டு, வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்போவதாக ஹாங்காங் தலைவர் திருவாட்டி கேரி லாம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமது ஃபேஸ்புக் பதிவில் அவர், “மக்களுக்கான வீடுகளின் எண்ணிக்கையை அதிரிக்கும் விதமாக புதிய கொள்கைகள் அறிவிக்கப்படும்,” என்று தெரிவித்துள்ளார்.

இதன் தொடர்பில், 2018 ஜூன் மாதம் வீட்டு வசதி குறித்து தாம் அறிவித்த ஆறு திட்டங்கள் தற்பொழுது செயல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

மானியங்களுடன் கூடிய 

வீட்டு விலைகலைச் சந்தை அடிப்படையிலான விலையில் இருந்து விடுவிப்பது, முதல் வீடு வாங்குவோருக்கான திட்டம், தற்காலிக வீட்டு வசதிக்கு கூடுதல் ஆதரவு, ஆறு நிலப் பகுதிகளை தனியார் பயன்பாட்டிலிருந்து பொதுத் தொகுப்புக்கு மாற்றுவது, குடியமர்த்தப்படாமல் காலியாக இருக்கும் வீடுகளுக்கு வரி விதிப்பது ஆகியவற்றுடன் வீட்டு விற்பனையில் நில 

மேம்பாட்டாளர்கள் கடைப்பிடிக்கும் சூழ்ச்சிமுறைகளைக் களைவது ஆகியவை அந்தத் திட்டங்கள் என விவரிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, ஹாங்காங் அரசு நேற்று காலியாக உள்ள வீடுகளுக்கு வரிவிதிப்பதை அரசிதழில் வெளியிட்டது.

ஹாங்காங்கை அண்மைய வாரங்களாக உலுக்கிவரும் ஆர்ப்பாட்டங்கள் தற்போது மீட்டுக்கொள்ளப்பட்ட நாடுகடத்தும் நகல் சட்டம் தொடர்பாகவும் அங்கு படிப்படியாக சிவில் உரிமைகள் பறிக்கப்படுவது தொடர்பாகவும் தொடங்கியது. எனினும், அங்கு வாழ்க்கைச் செலவினம் உச்சத்தில் இருப்பதும் எதிர்கால வேலைவாய்ப்புகள் தொடர்பாகவும் ஏற்பட்ட ஆத்திரம் பல இளையர்களை ஆர்ப்பாட்டத்தில் இறங்கத் தூண்டியதாக ராய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது.
 

Loading...
Load next