பாரிஸ்: போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் பயணிகள் தவிப்பு

பாரிஸ்: போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் பயணிகள் தவிப்பு

1 mins read

பாரிஸ்: அதிபர் இம்மானுவல் மெக்ரோனின் ஓய்வூதியச் சீர்திருத்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரான்ஸ் தலைநகர் பாரிசில் போக்குவரத்து ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக இரு பத்து ரயில் வழித்தடங்களில் ரயில் சேவைகள் முற்றிலும் முடங்கின. மேலும் இரு முக்கிய தடங்களில் சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். நடப்பிலுள்ள 42 வெவ்வேறு ஓய்வூதிய முறைகளை ஒருங்கிணைத்து, ஒரே முறையாக மாற்ற அதிபர் மெக்ரோன் விரும்புகிறார். இதையடுத்து, அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக, தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கியுள்ளன.