துருக்கி குண்டுவெடிப்பில் எழுவர் பலி

அங்காரா: துருக்கியின் தென்கிழக்குப் பகுதியில் நேற்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் எழுவர் கொல்லப்பட்டனர்; பத்துப் பேர் காயமடைந்தனர். ஆளுநர் மாளிகையை ஒட்டிய சாலையில் வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தது என்றும் அதை வாகனம் ஒன்று கடந்து சென்றபோது அந்தக் குண்டு வெடித்தது என்றும் கூறப்படுகிறது. இது குர்திய பாட்டாளிக் கட்சி எனக் கூறிக்கொள்ளும் பயங்கரவாதிகளின் வேலையாக இருக்கலாம் என்று அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.