தாக்குதலால் எண்ணெய் விலை உயரக்கூடும்

தாக்குதலால் எண்ணெய் விலை உயரக்கூடும்

1 mins read
7edd5004-ff63-4a4e-9625-f6ff302aa426
-

ஈரானிய அரசாங்கத்திற்கு ஆதரவாகச் செயல்படும் ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சிக்குழு, சவுதி அரேபியாவின் இரண்டு எண்ணெய் ஆலைகளை ஆளில்லா வானூர்திகளைக் கொண்டு தாக்கியதை ஒப்புக்கொண்டது.

இதனால் சவுதியின் எண்ணெய் உற்பத்தி பாதிக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு 5.7 மில்லியன் பீப்பாய்க்களாக எண்ணெய் உற்பத்தி குறையும் என்று கூறப்படுகிறது. தாக்குதலில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.

ஹவுத்தி இந்தச் செயலுக்குப் பொறுப்பேற்றபோதும் அதற்கான ஆதாரம் இல்லை என்று டுவிட்டரில் தெரிவித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ, நடந்தவற்றுக்கு ஈரான்தான் காரணம் எனக்கூறியுள்ளார்.

சம்பவத்தைக் குறைகூறிய அமெரிக்கா, சவுதியின் பாதுகாப்பை அதிகரிக்க அதனுடன் செயலாற்றத் தயாராக இருப்பதாகக் கூறியது.

இந்தச் சம்பவத்தால் எண்ணெய் விலை வெகுவாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.