ஆளில்லா வானூர்தி பயன்படுத்தி தாக்கப்பட்ட சவூதி ஆலைகள்

ஆளில்லா வானூர்தி பயன்படுத்தி தாக்கப்பட்ட சவூதி ஆலைகள்

1 mins read

ரியாத்: ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்தி சவூதி அராம்கோவுக்குச் சொந்தமான இரண்டு ஆலைகளில் தாக்குதல் நடத்தப்பட்டன.

இதனால் ஆலைகளில் தீ மூண்டதாகவும் அதை தீயணைப்பு அதிகாரிகள் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாகவும் சவூதி அரேபியாவின் உள்துறை அமைச்சு நேற்று தெரிவித்தது.

இந்நிலையில், தாக்குதல்களுக்கு ஏமனைச் சேர்ந்த ஹூதி போராளி அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டுள்ளதாக சவூதி ராணுவம் தெரிவித்தது.

சவூதியில் உள்ள அராம்கோவின் இரண்டு ஆலைகளை நோக்கி ஹூதி போராளி அமைப்பு 10 ஆளில்லா வானூர்திகளை அனுப்பித் தாக்குதல் நடத்தியதாக அறியப்படுகிறது.

சவூதி அரேபியாவில் தாக்குதல்களை தீவிரப்படுத்த அந்த அமைப்பு சூளுரைத்துள்ளது. ஏமனில் ஹூதி போராளி அமைப்புக்கு எதிராகப் போரிட்டு வரும் கூட்டணிப் படைகளுக்கு சவூதி அரேபியா தலைமை தாங்குவது குறிப்பிடத்தக்கது.

ஆலைகள் தாக்கப்பட்டதில் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.