லண்டன்: இங்கிலாந்தில் சைக்கிளில் செல்வோரை எட்டி உதைக்கும் புதிய கும்பல் போலிசாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இருசக்கர வாகனங்களில் வரும் அந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் சைக்கிளில் செல்வோரை எட்டி உதைக்க, அதனை பின்னால் வருபவர் படம் பிடித்துக்கொள்கிறார். இதுபோன்ற 'சைக்கோ' கும்பலின் தாக்குதலால் சைக்கிளில் செல்பவர்கள் படுகாயமடைந்து வருகின்றனர். இதையடுத்து இந்தக் கும்பலைப் பிடிக்க போலிசார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
சைக்கிளில் செல்வோரை எட்டி உதைக்கும் மர்ம கும்பல்
1 mins read
சைக்கிளில் செல்வோர் எட்டி உதைக்கப்படுவதைக் காட்டும் காணொளி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. படம்: இணையம் -

