இம்ரான் கான்: இந்தியாவுடனான போரில் பாகிஸ்தான் தோற்கும்

இந்தியாவுடன் வழக்கமான போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் தோல்வியைத் தழுவும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.

அல் ஜஸீரா செய்தி நிறு வனத்திற்குப் பேட்டி அளித்த திரு கான் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

“நான் அமைதியை விரும்பும் நபர். நாங்கள் ஒருபோதும் அணு ஆயுத போரில் ஈடுபடமாட்டோம். அதில் நான் தெளிவாக இருக்கி றேன். நான் போருக்கு எதிரானவன். போர் எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. இரண்டு அணுஆயுத நாடுகள் வழக்கமான போரில் ஈடு பட்டால், அந்தப் போர் பெரும்பாலும் அணுஆயுத போரில்தான் முடியும். வழக்கமான போர் ஏற்படுவதில் இருந்து கடவுள் எங்களைத் தடுத்திருக்கிறார். இந்தப் போர், ஏற்பட்டால் பாகிஸ்தான் தோல்வி அடையும்,” என்றார் அவர்.

அத்துடன் போரில் ஒரு நாட்டுக்கு இரண்டு சூழல்கள் ஏற்படலாம் என்றும் அவற்றில் ஒன்று சரண் அடைவது, மற்றொன்று சுதந்திரத்திற்காக இறுதிமூச்சு வரை போரிடுவது என்றும் சுட்டினார் பிரதமர் கான்.

இவற்றில் பாகிஸ்தான், இரண்டாவது சூழலைத்தான் நாடும். ஓர் அணுஆயுத சக்தி பெற்ற நாடு இறுதி மூச்சு வரை போரிட முற்பட்டால் பயங்கரமான பின் விளைவுகள் ஏற்படும்.

இதனால் ஐக்கிய நாடுகள் சபையையும் அனைத்துலக அமைப்புகளின் உதவியையும் நாடுவதாகக் கூறிய திரு கான் தற்போது அவை உடனடியாக செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

காஷ்மீர் பிரச்சினை குறித்து பாகிஸ்தான் பிரதமர் அளித்திருந்த இப்பேட்டி பற்பல சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரத்தை இந்தியா சில வாரங்களுக்கு முன்பு நீக்கியதால் இந்தியா பாகிஸ்தான் இடையே உள்ள உறவு கசந்துள்ளது. இந்நிலையில் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையிலான உறவு நாளுக்கு நாள் மேலும் பிரச்சினையாகிக்கொண்டே செல்கிறது. அதில் முக்கியமாக பாகிஸ்தான் அனைத்துலக அரங்கில் காஷ்மீர் பிரச்சினையைக் கொண்டு செல்ல முயன்று தோல்வி அடைந்துள்ளது. இதை அடுத்து காஷ்மீர் பிரச்சினை குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இவ்வாறு பேட்டி அளித்துள்ளார்.

“நாங்கள் போரைத் தொடங்க மாட்டோம். ஆனால் எங்கள் பாது காப்பிற்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் நாங்கள் இப்படியே இருந்துவிட மாட்டோம். எங்கள் கையில் எதுவும் இல்லை,” என்று குறிப்பிட்டுள்ளார் இம்ரான் கான்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!