சவூதி எண்ணெய் ஆலைகள் தாக்குதலுக்கு ஈரான் காரணம் என்று குற்றம் சாட்டும் அமெரிக்கா

சவூதி அரசுக்குச் சொந்தமான அராம்கோ எண்ணெய் நிறு வனத்தின் இரு வளாகங்களில் நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி தாக்குதலுக்கு ஈரான் காரணம் என்று அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பொம்பியோ குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் இது ஏமனில் இருந்து நடத்தப்பட்டதாக தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உலக எரிசக்தி விநி யோகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது,” என பொம்பியோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா அதன் கூட்டணி நாடுகளுடன் செயல்பட்டு உலக எரிசக்தி விநியோகம் தடையின்றி இடம்பெற நடவடிக்கை எடுக்கும் என்றும் இந்தத் தாக்குதலுக்கு ஈரான்தான் பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார் பொம்பியோ.

ஈரான் ஆதரவளித்து வரும் ஏமன் நாட்டு ஹுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று முன்தினம் 10 சிறிய ஆளில்லா வானூர்திகளை ஏவி ஆலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக முன்னர் தெரி விக்கப்பட்டது.

ஆலைகள் தாக்கப்பட்டதில் உயிர்ச்சேதம் இல்லையென்றாலும் இதனால் தினமும் 5.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் தயாரிப்பு பாதிக்கப்படும் என சவூதியின் எரிசக்தி துறை அமைச்சர் இளவரசர் அப்துலாசிஸ் பின் சல்மான் கூறியிருந்தார். இது சவூதி அரேபியாவின் மொத்த உற்பத்தியில் பாதியளவாகும்.

அப்கைக் எனும் இடத்தில் அமைந்துள்ள அராம்கோ நிறுவனத்தின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் குராய்ஸ் எனும் இடத்தில் உள்ள எண்ணெய் வயல் ஆகியவற்றில் தாக்குதல் நடத்தப்பட்டது.

நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அராம்கோவின் தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார்.

சென்ற ஆண்டு ஈரானின் அணுஆயுத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நிராகரித்து அந்நாட்டின் மீதான தடையை நீட்டித்ததால் இருநாடுகளுக்கும் இடையே பதற்ற நிலை உள்ளது.

இதற்கிடையே பெரட்டில் உள்ள ஹுதி கிளர்ச்சியாளர்களின் தொலைக்காட்சியான ‘யாயா சரியா’வில் பேசிய ஹுதி கிளர்ச்சியாளர்களின் செய்தித் தொடர்பாளர், “எதிர்காலத்தில் மேலும் பல தாக்குதல்களை எதிர்பார்க்கலாம்,” என்று எச்சரித்திருந்தார்.

மேலும், சவூதி அரேபியாவுக்குள் ஹுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய மிகப்பெரிய தாக்குதல் இது என்றும் சவூதி அரசாங்கத்தில் உள்ள முக்கியப் பிரமுகர்களின் உதவி யுடன் இந்தத் தாக்குதல் நடத்தப் பட்டது என்றும் அவர் தெரி வித்துள்ளார்.

இந்நிலையில் இந்த பயங் கரவாதத் தாக்குதலைத் தடுக்கவும் எதிர்கொள்ளவும் சவூதி அரசு தயாராக உள்ளதாக அந்நாட்டின் முடியரசர் முகமது பின் சல்மான் டிரம்ப்பிடம் தொலைபேசி மூலம் கூறியதாக அந்நாட்டின் அதிகாரபூர்வ செய்தி முகமையான ‘சவூதி பிரஸ் ஏஜென்சி’ தெரிவித்துள்ளது.

அப்கைக் எண்ணெய் சுத்தி கரிப்பு நிலையத்தில் உலகின் பயன்பாட்டுக்குத் தேவையான 7% பெட்ரோலிய எண்ணெய் உற் பத்தியைச் சுத்திகரிக்கும் வசதி உள்ளது. குராய்ஸ் எண்ணெய் வயலில்தான் உலக அளவில் உற் பத்தியாகும் கச்சா எண்ணெய்யில் 1% கிடைக்கிறது.

இன்றைய தாக்குதல்கள் சவூதி அரேபியாவின் ஆதரவைப் பெற்றுள்ள ஏமன் அரசுக்கு எதிராகப் போரிடும் ஹுதி கிளர்ச்சி யாளர்களின் அச்சுறுத்தலை வெளிக்காட்டும் வகையில் அமைந்துள்ளன. உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமாக அராம்கோ இருக்கும் நிலையில் இந்தத் தாக்குதல் கூடுதல் கவனம் பெற்றுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!