பறவையிடமிருந்து தப்பிக்க முயன்ற ஆடவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்

பறவையிடமிருந்து தப்பிக்க முயன்ற ஆடவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்

1 mins read

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு தெற்கே உல்லங்கோங் எனும் பகுதியில் நேற்று முன்தினம் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த முதிய ஆடவர் ஒருவரைப் பறவை ஒன்று தாக்கியது.

Magpie என்னும் காக்கை இனத்தைச் சேர்ந்த அந்தப் பறவையிடமிருந்து தப்பிப்பதற்காக வேகமாக சைக்கிளை ஓட்டிய அந்த ஆடவர், கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக தடுமாறி அங்கிருந்த வேலி ஒன்றின் மீது மோதினார்.

இந்த விபத்தில் ஏற்பட்ட பலத்த காயத்தால் அந்த ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அந்த ஆடவரைக் காப்பாற்ற மருத்துவ உதவியாளர்கள் போராடியும் தலையில் ஏற்பட்ட காயங்களால் அவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினர். அந்த முதியவருக்கு 76 வயது இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

விபத்து நடந்த இடத்தில் அடிக்கடி பறவைத் தாக்குதல்கள் நடப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.