ஹாங்காங்கில் ரயில் ஒன்று தடம்புரண்டதில் பலர் காயமடைந்ததாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
கிழக்கு ரயில் பாதையிலுள்ள ஹங் ஹோம் நிலையத்தில் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஹங் ஹோம்மிற்கு அருகிலுள்ள ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக ரயில் நிறுவனம் நேற்று தெரிவித்தது. மாற்று போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்ய அந்நிறுவனம் பயணிகளைக் கேட்டுக்கொண்டது.
சம்பவம் விசாரிக்கப்பட்டு வருவதாக எம்டிஆர் தெரிவித்தது. எதனால் ரயில் தடம்புரண்டது என்பது தெளிவாக இல்லை.

