போரிஸ் ஜான்சன்: கால நீட்டிப்பை ஏற்றுக்கொள்ள மாட்டேன்

லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக கால நீட்டிப்பை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும் அக்டோபர் 31ஆம் தேதி ஒன்றியத்திலிருந்து ெவளியேறுவது திண்ணம் என்றும் அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் யோன் கிளோட் யங்கரை லக்சம்பர்க்கில் பிரட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் சந்திக்க உள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான கால அவசகாசத்தை நீட்டிக்க திரு யங்கர் தம்மிடம் கோரிக்கை வைப்பாராகின் அதைத் தாம் நிராகரித்து விடப்போவதாகவும் திரு ஜான்சன் கூறியுள்ளார்.

இதுபற்றிக் கூறிய பிரட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டோமினிக் ராஆப், ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் ஒரு ஒப்பந்தத்துடனேயே வெளியேற விரும்புவதாகவும் எனினும், இந்தப் பிரச்சினையில் ஒரு இறுதி முடிவு காணப்பட வேண்டும் என்று பிரிட்டன் விரும்புவதாகக் கூறினார்.

லக்சம்பர்க்கில் திரு போரிஸ் ஜான்சனுடனான சந்திப்பில் பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக பேச்சுவார்த்தைகளுக்கு ஒன்றியத்தின் சார்பாக தலைமை தாங்கும் மைக்கல் பார்னியர் என்பவரும் பிரிட்டன் சார்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருபவரான ஸ்டிவ் பார்கிலே, பிரதமர் அலுவலகம் சார்பாக டேவிட் ஃபிராஸ்ட் ஆகியோர் கலந்துகொள்வர் என்று கூறப்படுகிறது.

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அக்டோபர் 19ல் ஒரு உடன்பாடு எற்பட்டு அந்த உடன்பாட்டின் அடிப்படையிலேயே பிரிட்டன் வெளியேற வேண்டும் என்றும் அப்படி முடியாவிட்டால் வெளியேறுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கக் கோர வேண்டும் என்றும் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் சட்டம் ஒன்றை இயற்றியது.

இதில் ஒரு பக்கம் அந்தச் சட்டத்தை அமைச்சர்கள் மதித்து நடப்பர் என்று கூறும் அதே நேரத்தில் பிரிட்டன் அக்டோபர் 31ல் ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது திண்ணம் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.

இதுபற்றிக் கூறிய திரு ஜான்சன், தி இன்கிரெடிபல் ஹல்க் என்ற சர்வ வல்லமை படைத்த கேலிச் சித்திர கதாநாயகனைப் போல் பிரிட்டன் அனைத்துத் தடைகளையும் தகர்த்து எறிந்து உடன்பாட்டுடனோ அல்லது உடன்பாடின்றியோ பிரிட்டன் ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது திண்ணம் என்று பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் டெய்லி மெயில் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

அத்துடன், இதன் தொடர்பில், அக்டோபர் 31க்குப் பிறகு எவ்வித தாமதத்தையும் பிரிட்டன் ஏற்றுக்கொள்ளாது என்று பிரிட்டிஷ் பிரதமர் அலுவலக வட்டாரம் விளக்கியது.

“இந்த பிரச்சினையில் பிரிட்டிஷ் பிரதமர் திரு யங்கரிடம் தான் உடன்பாடு கொள்ளவே விரும்புவதாகக் கூறுவார்.

ஆனால், அவ்வாறு ஏற்படாவிடில் அக்டோபர் 31க்குள் வெளியேறுவதுதான் பிரிட்டனின் கொள்கை என்பதைத் தெளிவு

படுத்துவதுடன், இதில் ஒன்றியம் கால அவகாசம் தர முன்வந்தால் அது நிராகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்படும் என்று அந்த வட்டாரம் கூறியது,” என்று பிபிசி செய்தித் தகவல் தெரிவிக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!